தமிழ் உயராய்வுத்துறை
தெய்வமணம் கமலும் திருச்செங்கொடு அடிவாரத்தில் பெண்கல்வி வளர்ச்சிக்காக
ஆரம்பிக்கப்பட்ட விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2003
ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ்ப் பட்டப் படிப்பும், 2006 ஆம் கல்வியாண்டு
முதுகலைத் தமிழ்ப் பட்டப் படிப்பும் 2009 ஆம் கல்வியாண்டு ஆய்வியல் நிறைஞர்
படிப்பும் 2012 ஆம் கல்வியாண்டில் முனைவர் பட்ட ஆய்வும் தொடங்கப்பட்டு,
இன்றுவரை 95 க்கும் மேற்பட்ட ஆய்வியல் நிறைஞர்களையும், 06 முனைவர் பட்ட
ஆய்வாளர்களையும் உருவாக்கி, நாளும் தமிழ் வளர்த்து வருகின்றது.
துறையின் தொலைநோக்குப் பார்வை
தமிழ்மொழியின் பயன்பாடு சார்ந்த அனைத்துச் சூழலிலும் தமிழ்த்துறை
மாணவியரைப் பங்கெடுக்கச்செய்தல். அதற்கான தமிழ் கல்விகளச் சூழலை உருவாக்கி
கற்றுத்தருதல். காலமாற்றத்திற்கு ஏற்ப தமிழ்மொழி சார்ந்த அனைத்துச் சூழலிலும்
மாணவிகளை தகவமைத்துக்கொள்ளச்செய்தல். உலகலாவிய தரத்தில் இளம் தமிழ்
ஆராய்ச்சி மாணவிகளை உருவாக்குதல்.
துறையின் குறிக்கோள்
- தமிழ்மொழியின் இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு, சமூகம்,
மொழியமைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளையும் பன்முகத்தன்மைகளையும்
மாணவிகளுக்கு வழங்குதல்
- இலக்கிய நவீனங்கள், மொழி அறிவியல் ஆகியவற்றை
புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்கி கற்றுத்தருதல்.
- தமிழ் மொழி சார்ந்த ஓலைச்சுவடி, பதிப்பு, மருத்துவம், கல்வெட்டு,
கணினி, ஊடகம் ஆகிய அனைத்து துறைகளிலும் மாணவிகளைத் தடம்பதிக்கச்
செய்தல.
- கலை, இலக்கியம், சமூகம் சார்ந்து மாணவிகளைப்
படைப்பாளர்களாக்குதல்.
- மொழி, நிலம், இனம், பண்பாடு சார்ந்த களநிகழ்வு, களஆய்வுகளில்
மாணவிகளை பங்கெடுக்கச் செய்தல்
- இலக்கிய, இலக்கணங்களிலிருந்து தகவல்களை பிரித்தாராயும் திறனை
வழங்கி மாணவிகளை ஆராய்ச்சிக்கு வழிப்படுத்துதல்.